Monday, June 11, 2012

எச்சரிக்கை....

ரிச்மண்ட் வாழ் தமிழ் கூறும் நல்லுலகைச் சார்ந்தோரே, அன்பர்களே, நண்பர்களே, ஆன்றோர்களே, சான்றோர்களே, சிறுவர்களே, சிறுமிகளே, இளைஞர்களே, இளைஞிகளே, நல்லிளம் சிங்கங்காள், உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

யப்ப்ப்பா மூனு வரி சுத்தத் தமிழ்ல எழுதரதுக்கே நாக்கு தள்ளுதே, எப்படிதான் தமிழ்நாட்ல மூச்சு விடாம மணி கணக்குல பேசராங்கன்னு தெரியலை.  விஷயம் ரொம்ப பெரிசில்லைங்க, நம்ம சங்கத்துப் ப்ளாக் 'ஆளில்லாத டீ கடை மாதிரி கிடக்கு'ன்னு சொல்லி யாரும் எழுதவாங்களான்னு சங்கத் தலைவர் கேட்க, கிறுக்கரவர் கிட்ட கேட்டா அவர் "கொஞ்சம் பிஸினஸ்ல பிசி, அதனால மட்டும் இல்லை, நான் கிறுக்கி யார் படிக்கராங்க, அதனால என்னத்த கிறுக்கி என்னத்த மாத்த முடியும் சொல்லு"ன்னு பிட்டை என் பக்கமே திருப்பிட்டார்.

தலைவரே, எழுதலாம் திடீர்ன்னு அவர் ஏன் ஜகா வாங்கினாருன்னு தெரியலை.  நம்ம மு.கோ நல்லாத்தான் எழுதிகிட்டிருந்தாரு, டக்குன்னு ஊருக்கு போயிட்டாரு, அவர எழுதச் சொல்லி அரவிந்தன்கிட்ட சொல்லனும், அதை அவன் எழுதி வெச்சு அவருக்கு ஃபோன் பேசும் போது சொல்லனும், இப்டி ஆயிரம் உம் கொட்டினா எப்ப அது நடக்குமோ எல்லாம் அந்த ஶ்ரீரங்கம் பெருமாளுக்குத்தான் தெரியும். அட இன்னொரு உம்.

சதங்கா எப்ப அடுத்த பட்டுக்கோட்டையார் பதிவை போடுவார்ன்னு நான் கேக்கப் போக, நாகு "யோவ் தடயம் என்ன ஆச்சு"ன்னு என் தலையை உருட்டினா என்ன செய்யரதுன்னு அவரை விட்டுட்டேன்.

அடுத்து நாகு, ஜெயகாந்தன் ரெண்டு பேர்தான், நாகுவை வெளில வாசல்ல பாக்கவே முடியலை என்ன காரணம்னு தெரியலை, மீன் பிடிக்கராரோ, இல்லை விக் வெச்சுகிட்டு எங்க சுத்தராரோ தெரியலை, சரி ஜெயகாந்தனை பிடிக்கலாம்ன்னா நான் வேலை செய்யர அதே இடத்துலதான் அவரும் வேலை செய்யராரு, அவரை எப்படி பின்னி பெடலெடுத்துகிட்டு இருக்காங்கன்னு எனக்கு தெரியும், (அவர பிடுங்கர பாதி பேர் எங்க குரூப் தான்), சரி எப்படியும் நம்ம மக்களுக்கு இந்த கோடை கொஞ்சம் சோதனையாத்தான் இருக்கப் போறது அதுல நாம எழுதினா என்ன திட்டவா போறாங்க, அப்படியே திட்டினாலும் நாம வீட்டுல வாசல்ல வாங்காத திட்டா சொல்லுங்க.  இதெல்லாம் எழுத்துத் துறைல ரொம்ப சாதாரணமப்பா!

அடுத்து எதைப் பத்தி எழுதலாம்னு ஒன்னும் தோணலை, சரி எதைப் பத்தி வேணும்னாலும் எழுதிடறதுன்னு யோசிச்சா ஒரு ஐடியாவும் கிடைக்கல, யோசிச்சு யோசிச்சு மண்டை காஞ்சு போயி அங்க இங்க நுனிப்புல் மேயும் போது நித்தியைப் பத்தி என் ப்ரெண்ட் ஃபேஸ் புக்ல ஒரு லிங்க் அனுப்பியிருந்தான், அது சூப்பர் காமெடி ஆக்டர் நித்தின்னு வந்திருக்கு.

இவர் அடிக்கர கூத்துக்கு முன்னாடி ஒரு கூத்தும் நிக்காது போல இருக்கு.

http://www.youtube.com/watch?v=wEFBQjCnFao&feature=endscreen&NR=1

இவர் பேசரத கேட்டதுக்கு அப்புறம் எப்படி இத்தனை பேர் இவர் பின்னாடி வராங்கன்னு தெரியலை. நல்லா ஒரு ஹெட் ஃபோன் காதுல மாட்டிகிட்டு, ரெண்டு சீட் தள்ளி ரஞ்சிதா வோட ஒரு பெரிய பேட்டியை கொடுக்கராரு.  இவர் பேசரது ஒரு காமெடின்னா, அந்தம்மா, சும்மா சொல்டி சொல்டி ஆங்கிலத்துல அடிக்கராங்க, அதுக்கு பின்னனியில கவுண்டர் டைலாக் ஓட்டரது சூப்பர்.


நித்தி மதுரை ஆதீனமா வந்தது சரியா தப்பான்னு ஒரு பட்டி மன்றம் போட்டு விவாதிக்கலாமான்னு தமிழ் சங்க சீனிவாசன் கிட்ட கேக்கனும்.   நல்ல தமாஷா இருக்கும்.  நேத்திக்கு அவரை அரெஸ்ட் பண்ண கர்நாடகா போலீஸ் தேடுதாம், இவர் தலைமறைவா இருக்காராம்.  இத்தனை நாள் டிவி, பேப்பர், பத்திரிகைன்னு போட்டோ வந்த ஒருத்தர் தமிழ்நாட்டுல தலைமறைவா இருக்காராம், இவரை போலீஸ் தேடுதாம், நல்லாத்தான் கதை வுடராங்க.

கிறுக்கரவர் கிட்ட நித்தியைப் பத்தி கேட்டேன். "ஏஏஏன் எவன் எப்படி போனா எனக்கு என்ன, ரிச்மண்ட் ஆளுங்க பல பேர் மதுரைதான் அவங்கள கேளு அவங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேதான்" ன்னுட்டாரு.  அப்படியே, உங்க ஊர் பண்ருட்டிகாரர் என்ன சொல்றார்ன்னு கேக்கச் சொன்னாரு கேட்டுட்டேன்.

சென்னை வீட்டுக்கு ஃபோன் போட்டா, சென்னைல வெயில் மண்டைய ஒடைக்குதாம், இதுல ரெண்டு மணி நேரம் கரண்ட் கட்டாம், இல்லாத கரெண்டுக்கு ஏண்டா காசு வாங்கரீங்கன்னு பல பேர் கத்தராங்களாம்.  சரின்னு  நம்ம அண்ணாச்சிகளுக்கு ஃபோன் போட்டா, ஐ.பி.எல் ல சென்னை தோத்து போச்சு, காசு வாங்கிட்டு ஆடிட்டாங்கன்னு அவங்க ஆலாபனை, சென்னை எப்படிடா ஃபைனல்ஸ்க்கு வந்தாங்கன்னு கேக்கலாம்,  கேட்டா, "ஐ.பி.எல்லை பத்தி உனக்கு என்னடா தெரியும்"ன்னு அவங்க கேட்டா எனக்கு என்ன தெரியும் சொல்லுங்க.  எழுதரது ஒரு மாதிரி கோர்வையா வருதுல்ல, ஹூம்,  இதெல்லாம் ஒரு கதை நாடகம் எழுதும் போது வரமாட்டேங்குது.  


அடுத்து, ஜெவும் சசியும் சேர்ந்துட்டாங்கன்னு சங்கத் தலைவர் ரொம்ப கோபமா இருந்தாரு, இப்ப என்ன நிலைமைன்னு தெரியலை.  ராஜா வெளில வந்துட்டார், நேரு ஶ்ரீரங்கனுக்கு நேர்ந்து கிட்டு சமீபத்துல மொட்டை போட்டுட்டாராம்.  இந்தப் பகுத்தறிவுக்கு முன்னாடி யார் என்ன சொல்ல முடியும்னு தெரியலை.

நாளைக்கு ரிச்மண்ட்ல எலெக்‌ஷன், காலைல போய் ஓட்டு போட்டுட்டு வேலைக்கு போகனும். 10 K ரேஸ் ஓடும்போது ஒரு இந்திய இளைஞன் "நான் எரிக் காண்டருக்கு எதிரா தேர்தல்ல நிக்கப் போறேன்"னு சொன்னான், அவனை நம்பி அவன் நீட்டின ஒரு அட்டைல கையெழுத்து போட்டுட்டு வந்தேன், அவன் கதி என்ன ஆச்சுன்னு தெரியலை.

நம்மூர் லைப்ரரில புத்தக ஆய்வுன்னு ஒன்னு அடிக்கடி நடத்தராங்க, அதுமாதிரி தமிழ் சங்கத்து சார்புலயோ இல்லை தனியாவோ செஞ்சா என்ன?  நீங்க யாராவது ரெடின்னா, எனக்கு ஒரு இ-மெயில் அனுப்புங்க(rmurali@gmail.com).  புத்தகம்னு இல்லை, சினிமா, டிராமா எதுவா இருந்தாலும் பரவாயில்லை, அட சும்மா கூடி உக்காந்து அரட்டை அடிக்கலாமா சொல்லுங்க நான் ரெடி.

ஆமிர் கான் சமீபத்துல 'சத்ய மேவ ஜயதே'ன்னு ஒரு ப்ரோக்ராம் பண்ண ஆரம்பிச்சிருக்கார்,  அதை தமிழ்ல  விஜய் டிவி ல பார்க்காதீங்க, முடிஞ்சா யூ ட்யூப்ல யோ இல்லை Star TVலயோ பாருங்க, ஹிந்தில பார்த்தா ஒரு பாதிப்பு இருக்கத்தான் செய்யுது.  முதல் வார நிகழ்ச்சியை பார்க்க முடியலை அவ்வளவு கொடுமைக்கார கணவர்களை காமிச்சாங்க.  பார்த்ததுக்கு அப்புறம் கொஞ்சம் மனசு கனமா இருந்தாலும், நிச்சயம் பூனைக்கு மணியை நல்லாத்தான் கட்டறாரு.

இந்தப் பதிவை முடிக்கரதுக்கு முன்னாடி, புதுக்கோட்டை இடைத் தேர்தல்ல புரட்சித் தலைவியின் அ.இஅ.தி.மு.க அமோக வெற்றி பெற வாழ்த்தி, போட்டிக்கு வரதுக்கு முன்னாடியே, பயந்து போய் ஒடிவிட்ட தி.மு.க வின் தலைமைக்கு ஆறுதலைச் சொல்லி, ராசா ஒருவழியா ஜாமீன் கிடைச்சு வந்திருக்கார் அவர்கிட்ட வாங்க வேண்டிய பங்கையெல்லாம் வாங்கிட்டு அதையெல்லாம் மனைவி, துணைவி, ஒட்டினது, ஒட்டாதது, சேர்ந்தது, சேராததுன்னு எல்லாத்துக்கும் பங்கு போட்டு கொடுத்துட்டு உளியின் ஓசை மாதிரி ரம்பத்தின் ரீங்காரம்னு ஒரு டப்பா கதை எழுத கிழவரை வாழ்த்திவிட்டு அடுத்த முறை சந்திக்கிறேன்.

முரளி இராமச்சந்திரன்.

2 comments:

  1. //நாகுவை வெளில வாசல்ல பாக்கவே முடியலை என்ன காரணம்னு தெரியலை, மீன் பிடிக்கராரோ, இல்லை விக் வெச்சுகிட்டு எங்க சுத்தராரோ தெரியலை,//

    விக் நல்லாதான் வேலை செய்யுது. பொண்ணு பரத நாட்டியம் ஆடும்போது நீங்க வீடியோ எடுக்கும்போது பக்கதுலதான் நின்னுகிட்டு இருந்தேன். உங்களுக்குதான் அடையாளம் தெரியலை.

    நீங்களாவது நாகுவை வெளில பாக்க முடியலைன்னு பிளாக்ல எழுதறீங்க. அவனவன் வெளில கடை கண்ணில, கோவில்ல பாக்கும்போது, என்ன உங்கள வெளில பாக்க முடியல'ன்றான். அதுதான் புரியல. ஒருவேளை நான் ஸ்பேஸ் ஷட்டில்ல ஏறி 'அண்ட' வெளில போய்தான் தரிசனம் கொடுக்கனுமோ :-)

    தலைவரும், கிறுக்கறவரும், நீங்களும் ஆளாளுக்கு கொம்பு சீவி விட்டுக்கோங்க. நான் அந்த ஆட்டத்துக்கு வரலை. :-)

    நித்தி வீடியோ சூப்பரோ சூப்பரு...

    ReplyDelete
  2. சூப்பர் மசாலா டீ ஒண்ணு போட்டு கலக்கிட்டீங்க. கடையில டீ குடிக்கிறத விடுங்க, சும்மா தினத்தந்தி படிக்கக் கூட ஆளக் காணோம், இல்லாட்டி பேப்பர் படிச்சுட்டு நைசா நழுவிடுராங்கன்னு நினைக்கிறேன். நாகு, நம்ம Statscounter என்ன சொல்லுது, யாரவது வராங்களா?

    முரளி, கலாம் / பிரணாப் பத்தி எழுதுங்க, நானும்,நம்ம தானைத் தமிழினத் தலைவரை ஏன் ஜனாதிபதிக்கு நிறுத்தக் கூடாதுன்னு எழுத முயற்சி பண்றேன். வீல் சேர்ல இருக்குறது ஒரு முக்கியமான தகுதி, மத்த குறிப்புகள தொகுத்துக்கிட்டு இருக்கிறேன்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!