Sunday, April 22, 2012

அடையாளம்

அன்பான தமிழர்களே,

நானும் என் நண்பரும் பேசிக் கொண்டிருக்கையில், மிக சாதரணமாக அவர் "குளிர்" என்பது ஆங்கில வார்த்தை என்று சாடி விட்டார்.
"COOL AIR " என்பது தான் குளிர் என்று மாறி விட்டது. வட காற்று என்ற திசை சொல் தான் வாடைக் காற்று என்று மருவியது. கூதல் என்பது தான்
உண்மையான தமிழ் சொல் என்கிறார் . உங்களின் வாதத்தை இங்கே பதிவு செய்யுங்கள். மிக்க நன்றி.

இப்படியே போனால் நம்மின் அடையாளம் ஒவ்வொன்றும் வேறு ஒருவரின் அடையாளம் ஆக கருதப்படும்.
நாம் நம்முடைய அடையாளத்தை தொலைத்து கொண்டு இருக்கிறோம். தயவு செய்து இந்த வலைதள தொடர்பை பாருங்கள்.

மிக சரியான வரிகள்." http://www.youtube.com/watch?v=TnWbRFabSrg&feature=ரேலடேத்"
நாம் நாமே என்று பெருமை பேசும் காலம் நெருங்கி விட்டது.
வாருங்கள் தமிழர்களே ஒன்று சேருவோம்.

வேதாந்தி



3 comments:

  1. //அவர் "குளிர்" என்பது ஆங்கில வார்த்தை என்று சாடி விட்டார்.
    "COOL AIR " என்பது தான் குளிர் என்று மாறி விட்டது. வட காற்று என்ற திசை சொல் தான் வாடைக் காற்று என்று மருவியது. //

    கெளம்பிட்டாய்ங்கய்யா, கெளம்பிட்டாய்ங்க...

    இதுதான் 'கூதல்' என்பது :-)

    இது எல்லாம் கொஞ்சம் ஓவர். குதிரைக்கு குர்ரம் - அதை விட்டுட்டாரே?

    நம்முடைய அடையாளத்தைத் தொலைத்து விட்டோம் என்பது சரிதான். நீங்கள் பயன்படுத்திய உதாரணங்களால் இல்லை. கோபிநாத் சொல்கிறாரே - கோட்டு போட்டால் மரியாதை.

    சமீபத்தில் ஒரு நண்பர் சொன்ன கருத்தைக் கேட்டு அதிர்ந்தேன். தமிழறிவு மிக்க அரசியல்வாதியின் ஊழலைப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் தமிழறிவு இல்லா அரசியல்வாதியின் ஊழல் மோசம். இது எப்படி இருக்கு. :-)
    இந்த விஷயத்தில் அடையாளத்தைத் தொலைத்து விட்டு,
    எவ்வூழல் யார் யார் செய்யினும், அவ்வூழலின் மெய்யூழல் காண்பதறிவு!

    திரும்ப டாபிக்குக்கு வருகிறேன். நம் அடையாளத்தைத் தொலைப்பது என்று கோபிநாத் சொல்வது என் ஊரைக் கேட்டால் பண்ருட்டி என்று சொல்லாமல், பாண்டிச்சேரிக்கு அருகே, கடலூருக்கு அருகே என்று ஜல்லியடிப்பது.

    தனக்கு தமிழ் தெரியாது என்பதை பெருமையாகச் சொல்லிக் கொள்வது தமிழர்களால் மட்டும்தான் முடியும். அதுதான் கோபிநாத் சொல்லும் அடையாளம். அருவியை வாட்டர்ஃபால் என்பது மொழிச்சிதைப்பு. அடையாள மாற்றம் அல்ல. வேட்டி போடத் தயக்கம், கோவில் போய்விட்டு வெளியே வரும்போது விபூதி, குங்குமத்தை அழித்துவிட்டு வருவது - இவைதான் அடையாளத் தொலைப்பு.

    பேச்சில் ஆங்கிலக் கலப்பு தமிழர்களுக்கு மட்டுமானதல்ல. அந்த மாற்றம் உலகளாவியது. தமிழிலும், தெலுங்கிலும், ஹிந்தியிலும் அதே கதைதான். வேலைநிமித்தமாக சந்தித்த ஸ்வீடன்காரரும் அதையே சொன்னார்.

    இந்தத் தலைமுறை சிங்கை, மலேய தமிழர்களுக்கும் அதே நிலைதான்.

    ReplyDelete
  2. வேதாந்தி,

    சங்கை ஊதிட்டீங்க. நடக்கரது நடக்கட்டும்.

    முரளி

    ReplyDelete
  3. தமிழ் வார்த்தைகள் பற்றிய விவாதிப்பது கூட தவறு என்று நினைத்துதான் இங்கு யாரும் விவாதிக்கவில்லை போலிருக்கிறது

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!