Friday, January 13, 2012

பொங்க‌ல் வாழ்த்து - 2012



ஏர் பூட்டிய எருது
நிலம் பிளக்கும் உழவன்

எம்குல‌ப் பெண்க‌ளின் வ‌ருகை
விண் அதிரும் குலவை

வெண் மேகம் நீந்தும்
நீர் ததும்பும் நிலம்

சடசடத்துக் கதை பேசும்
காற்றில் ஆடும் நாற்று(க‌ள்)

முப்பொழுதும் நீர் பிடிக்க‌‌
த‌ப்பாது வ‌ள‌ரும் ப‌யிர்

நீண்டு வளர்ந்து பின்
தலை வ‌ண‌ங்கும் நெல்மணி(க‌ள்) !

***

ஞாயிற்றின் வ‌ர‌விற்கு,
மாக்கோல‌த் த‌ரையினிலே
ம‌ஞ்ச‌ள் த‌ண்டுடுத்தி
வைத்திட்ட‌ ம‌ண்பானை

க‌ற்க‌ண்டுத் தேனோடு
வெல்லம் கலந்திடவே
நீரூறும் ந‌ம்நாவில்
ப‌ச்ச‌ரிசிப் பால்பொங்க‌ல்

உண்டு மகிழ்ந்திடுவோம்
உழ‌வ‌னை வாழ்த்திடுவோம்
வைய‌க‌ம் தழைத்திட‌
உழ‌வினைப் போற்றிடுவோம் !!

***

அனைவ‌ருக்கும் இனிய‌ பொங்க‌ல் ந‌ல்வாழ்த்துக்க‌ள் !!!

படம்: நன்றி இணையம்

8 comments:

  1. மண்பிளந்து,துளிர்த்து வளர்ந்து,கிளைபரப்பி, பூவும் ,பிஞ்சும்,காயும் கனியுமாக நிற்கிற மரங்களும்,படர்ந்து பரவி இருக்கிற தாவரங்களும்,நெடித்து வளர்ந்து நிற்கிற செடிகளுமாய் எமது வறிய விவசாயின் நினைவு கூறட்டும் இந்த இனிய பொங்கல் திருநாளில்/
    அனைவருக்கும் தைத்திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. சதங்கா,

    உங்கள் தமிழ், இளமைத்துள்ளளோடு தமிழக பொங்கல்த் திருவிழாவை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

    முரளி

    ReplyDelete
  3. தைப் பொங்கல் திருநாளை ஒரிரு நாட்களுக்கு முன்னரேயே கொண்டாடியது போல இருந்தது படித்தபோது.

    பொங்கல் வாழ்த்துக்கள்!

    நேற்று நண்பர்களுடன் ரிச்மண்டில் இருக்கும் வர்ஜிர்னியா சட்டசபைக்கு சென்றிருந்தேன். அங்கே பளிங்கில் இருக்கும் ஜார்ஜ் வாஷிங்டன் சிலையில் அவர் விவசாயி என்பதைக் காட்ட அவர் பக்கத்தில் ஓர் ஏர்கலப்பை இருக்கும். பொங்கலும் உங்கள் கவிதையும்தான் நினைவுக்கு வந்தது.

    http://www.bluffton.edu/~sullivanm/virginia/richmond/capitol/houdonside.jpg

    ReplyDelete
  4. நன்றி விமலன், முரளி, நாகு !!!

    தமிழ் புலவர் பண்ருட்டி நாயகனிடம் ஒரு கேள்வி: "முன்னரேயே" எந்த அகராதியில் உள்ள வார்த்தை ? ;)

    ReplyDelete
  5. கம்பனையே கவுத்த ஊராச்சே. நான் எந்த மூலைக்கு :-)

    ReplyDelete
  6. பேரச் சொன்னாலும் ஊரச் சொல்லக்கூடாதுனு நீங்க தான் சொல்லிக் கொடுத்தீங்க. அதனால பேரக் கூடச் சொல்றதில்லை. நீங்க என்னடான்னா ;))))

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!