Sunday, September 20, 2009

கோவிந்தா கோவிந்தா

பாரதியார் ஆசிரியர் பொறுப்பு ஏற்று நடத்தி வந்த இந்தியா பத்திரிகையை பிரிட்டிஷ் அரசாங்கம் 1908 -ம் ஆண்டு தடை செய்தது. பாரதியாரை கைது செய்யவும் உத்திரவு போட்டது. கைது உத்தரவு பற்றி முன் கூட்டியே அறிந்த பாரதியார் தலைமறைவாக பாண்டிச்சேரிக்கு போய்ச் சேர்ந்தார்.

பிரெஞ்சு நிர்வாகத்தில் இருந்த பாண்டிச்சேரியில் தங்கி கொண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக தொடர்ந்து எழுதும் நோக்கத்துடன்தான் அங்கே போய் சேர்ந்தார். அங்கு தங்கி இருந்த படி பல பத்திரிகைகளை எழுதினார்.அவர் எழுதிய கட்டுரைகள் பாண்டிச்சேரியில் அச்சடித்து பிரிட்டிஷ் நிர்வாக பகுதிக்கு கடத்தி வர பட்டு விநியோகிக்க பட்டது.

1918 -ம ஆண்டு வரை பத்து ஆண்டுகள் பாரதி பாண்டிச்சேரியில்தான் வாழ்ந்தார். அங்கே வாசம் செய்த காலத்தில்தான் பாரதியார் பாஞ்சாலி சபதத்தை எழுதினார். பல இலக்கிய விமர்சகர்கள் பாஞ்சாலி சபதத்தை பாரதியின் படைப்புகளிலேயே உன்னதமானது என்று கருத்து தெரிவிக்கின்றனர். வ.வே.சு ஐயர் பாஞ்சாலி சபதத்தை "அக்ஷர லக்ஷம்" பெறும் என்று கூறி பாராட்டி இருக்கிறார். இப்படி எல்லோராலும் பாராட்ட பட்ட பாஞ்சாலி சபதத்தை பாரதி என்ன நோக்கத்தில் எழுதினார்?? பாரதியாரை பாஞ்சாலி சபதம் எழுத வைத்த அந்த ரசமான சம்பவம் பற்றி பார்க்கலாம்.

பாண்டிச்சேரியில் பாரதியாருக்கு ஏராளமான நண்பர்கள் கிடைத்தனர். அரவிந்தருடனும் பாரதிதாசனுடனும் தொடர்பு கிடைத்தது அந்த நாட்களில்தான்.

பல நண்பர்களுடன் கூடி ரசமான இலக்கிய விவாதங்களில் ஈடுபடுவதுண்டு. பாரதியார் மிகச்சிறந்த முறையில் விவாதிக்கும் திறன் கொண்டவர். நகைச்சுவையாக பேசி தன் கருத்துக்களை முன்வைக்கும் ஆற்றல் அவருக்கு அதிகம். போலித்தனத்தையும் மூடநம்பிக்கையையும் கேலியும் கிண்டலும் செய்து குபீர் சிரிப்பு வரவழைப்பார்.

ஒரு நாள் இரவு வேளையில் தன்னுடைய நண்பர் வீட்டுக்கு போனார்.அன்று ஏதோ விசேஷமான நாள். அதை ஒட்டி நண்பர் வீட்டு அருகில் தெருவில் உபந்நியாசம் ஏற்பாடு ஆகி இருந்தது. மகாபாரத கதையின் ஒரு பகுதியை ஒருவர் பிரசங்கம் செய்து விளக்கி கொண்டு இருந்தார்.

பாரதி தேடி போன நண்பர் வீட்டில் இல்லை. ஆகையால், பாரதியார் நண்பர் வீட்டு அருகில் நின்று கொண்டு கதை பிரசங்கத்தை கேட்டு கொண்டிருந்தார். பிரசங்கம் செய்து கொண்டிருந்தவர் பேச்சில் சத்தும் இல்லை சாரமும் இல்லை. இடையில் சொல்லுக்கும் தடுமாறினார். சொல்ல வந்த பொருளையும் தேடி தேடி சொன்னதால் பேச்சு தடைப் பட்டது. இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் கூட்டத்தில் இருந்தவர்கள் கதை கேட்டு கொண்டிருந்தார்கள். கூட்டத்தில் பலர் தூங்கி கொண்டிருந்தார்கள். விசேஷ நாட்களில் புராணம் சொல்வதை கேட்டால் போகும் இடத்துக்கு புண்ணியம். அதை தூங்கி கொண்டு கேட்டால் என்ன? விழித்துக்கொண்டு கேட்டால் என்ன ?

சொல்ல வந்த விஷயம் நினைவுக்கு வராதபோது அதை சமாளிக்க பிரசங்கி " கோவிந்த நாம சங்கீர்த்தனம் கோவிந்தா கோவிந்தா " என்று குரல் கொடுத்தார்.

அவருடைய ஓங்கிய குரலை கேட்டு தூங்கி கொண்டிருந்தவர்களும் விழித்துக் கொண்டு "கோவிந்தா கோவிந்தா" என்று குரல் கொடுத்தார்கள். இப்படியாக தூங்கி கொண்டிருந்தவர்களை விழிக்க செய்ய கோவிந்தன் பெயர் பயன் பட்டது .

இந்த காட்சியை தொடர்ந்து அரை மணி நேரம் பார்த்து கொண்டிருந்தார் பாரதியார். அவருக்கு மனதில் பெரும் வேதனை. வீர காவியமான மகாபாரதத்தை பொழுது போக்கவும் புண்ணியம் தேட குறுக்கு வழியாகவும் எண்ணிய மக்களைப் பற்றி நினைத்து வேதனை பட்டார். அரைகுறையாக படித்து விட்டு கதை சொல்லி பிழைப்பு நடத்தும் பிரசங்கியை நினைத்து வருந்தினார். பக்தி என்ற பெயரில் மூட நம்பிக்கைகளை வளர்பதை ஒருபோதும் பாரதியார் ஏற்று கொண்டதில்லை.

பாரதியின் நண்பர் வீட்டு வேலைக்காரன் வாசலில் நின்று கொண்டிருந்தான். அவனுடைய பெயர் கோவிந்தன். பாரதியார் அவனை அழைத்தார். அவனிடம் சொன்னார்: அந்த ஐயர் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார். இடையில் கோவிந்தா கோவிந்தா என்பார். அப்படி அவர் சொன்னவுடன் அவரிடம் ஓடி போய் "ஏன் சாமி, கூப்பிடீங்களா" என்று கேள் என்றார்.

வேலைக்காரன் தயங்கினான். பாரதியார் அவனை வற்ப்புறுத்தி தைரியமாக போய் நான் சொன்னபடி செய் என்றார். வேலைக்காரன் கோவிந்தனும் பிரசங்கி அருகில் போய் நின்றான்.

சில நிமிடங்கள் கழித்து பிரசங்கி வழக்கம் போல் "கோவிந்த நாம சங்கீர்த்தனம் கோவிந்தா கோவிந்தா" என்றார். வேலைக்காரன் கோவிந்தன் அவர் அருகில் போய் "ஏன் சாமி, கூப்பிடீங்களா" என்றான்.

பாகவதர் திகைத்து போனார். கூட்டத்தில் இருந்த எல்லோரும் விஷயம் அறிந்து சிரித்தார்கள். இப்பொழுதுதான் எல்லோருடைய தூக்கமும் முழுமையாக கலைந்தது.

சற்று தூரத்தில் நண்பர் வீட்டு வாசலில் நின்றபடியே அந்த காட்சியை பாரதியார் ரசித்து கொண்டிருந்தார். அதே நேரத்தில் அவருடைய உள்மனதில் ஒரு வேதனை இருந்தது. அந்த வேதனை அவருக்கு பல நாள் தொடர்ந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு வீரகாவியத்தின் உண்மை பொருளை உணர்த்தும் நோக்கத்தோடும், காவியம் சொல்லும் நீதிகளை சமகாலத்துக்கு பொருத்தமான முறையில் சொல்லும் நோக்கத்தோடும்தான் பாரதியார் பாஞ்சாலி சபதம் எழுதினார்.

மு. கோபாலகிருஷ்ணன்

26 comments:

  1. நான் இந்த சம்பவத்தையும் கேள்விப்பட்டதில்லை. சுவாரசியமான சம்பவம்.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, திரு. மு.கோ. அவர்களே.. நீங்கள் எழதவிருக்கும் மற்ற விஷயங்களுக்கும் நன்றி! :-)

    ReplyDelete
  2. Good one.

    http://www.youtube.com/watch?v=ejzJYOPHedU

    ReplyDelete
  3. பாஞ்சாலி சபதம் கிடைக்கக் காரணமான சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  4. It is superb. There must be something or some one behind every achievements.

    Kannadasan also told that he met with some experience before writing each songs

    Vedhanthi

    ReplyDelete
  5. சுவாரஸ்யமான பதிவு.

    ReplyDelete
  6. பதிவு அறுமை.

    பல காலங்களுக்கு முன்பு பாரதியாரைப் பற்றி படித்தது உங்கள் பதிவைப் படித்ததும் நினைவுக்கு வந்தது. ஒரு முறை அவர் பாண்டிச்சேரியில் இருந்த சமயம் ஒரு கடைக்காரர் பாரதியின் பாடல்களை தனக்கு தோன்றிய மெட்டுக்களில் பாடிக் கொண்டிருந்தார், அந்த கர்ணகடூர ராகங்களை தாங்க முடியாமல் பாரதி அந்தக் கடைக்காரரின் கடையில் இருந்த பொருட்களை எல்லாம் தாறுமாறாக இறைத்தார். கடைக்காரருக்கு இவரை அடையாளம் தெரியவில்லை. அதனால் கோபமாக இவரிடம் ஏன் என் கடையில் இப்படி செய்கிறாய் என்று சண்டைக்கு வர அவதற்கு பாரதி "என் பாடலை நீ உன் இஷ்டப்படி தாறுமாறாக பாடலாம் என்றால், உன் கடையில் உள்ள பொருட்களை நானும் தாறுமாறாக போடலாம்" என்று சொல்ல பாரதியின் நியாயமான கோபத்தை அறிந்து அந்த கடைக்காரர் மன்னிப்பு கேட்டார்.

    பாரதி ஒரு சாதாரண படைப்பாளி இல்லை, மிகப் பெரிய கலைஞன், சமூக ஆர்வளர் அவருடைய கோபங்கள் மிக மிக சரியான ஒன்று.

    முரளி.

    ReplyDelete
  7. நண்பரே

    எதிர்மறை கருத்தை எழுதுவதற்கு மன்னிக்கவும்.

    நான் பாரதி பக்தனல்ல.

    பாரதத்தின் ஒரு நிகழ்ச்சி (although it is a pivotal point in the epic) மட்டுமே பாரதி எடுத்துக்கொண்டார். பாஞ்சாலி சபதம். ஏன்? அங்கு அவர் தன் ‘வீரம் சொட்டும்’ கருத்துகளை எழுதமுடியும் எனத்துணிந்ததனால். இராமாயணத்தை அவர் நெருங்கவில்லை.

    பாரதம், ஒரு வீர காவியம் என நீஙகளும் பாரதியும் நினத்தால் அஃது நும்மிருவரின் சொந்தகருத்தே.

    பிறர் அப்படி நினைக்கத் தேவையில்ல.

    பாரதியின் பார்வை ஒரு imperfect view.

    அவர் அக்காலத்தில் நாம் வெள்ளைக்காரனிடம் பட்ட அடிமைத்தனத்துக்கு காரணம் நம் கோழைத்தனம் மட்டுமே எனக் கொண்டார்.

    மேலும், ஆதிபுராணங்கள் நம்மை வீரர்களாக்கவே எழுதப்பட்டன என்றும், அவைகளை உயிர்ப்பித்து மக்களுக்கு வீரத்தை உண்டாக்க முடியும், உண்டாக்க வேண்டும் என குழந்தைத்தனமாக நம்பினார்.

    எனவே, அவர் சொல்லும் இந்து மதம், ‘militant hinduism' இன்றைய parlanceல்.

    ‘மூடநம்பிக்கைகளை’ எதிர்த்தார் என சொன்னீர்கள். ‘மூடநம்பிக்கைகள்’ என்று எதுவும் கிடையா. எல்லாம் நம்பிக்கைகளே. அவற்றுள் மக்களுக்கு தீங்கிழைப்பவை உள. அவற்றின் பெயர் ’கெட்ட நம்பிக்கைகள்’ மட்டுமே. மூடநம்பிக்கையென்றால், கடவுள் உண்டு என்பதும், பூனை குறுக்கேபோனால் ஆபத்து என்பதும், ‘மூட’நம்பிக்கைகளே. No empirical evidences for both. Both cant be accepted by science.

    நம்பிக்கைகள் வேண்டாவென முடிவெடுத்தால், எம்மதத்திலும் நீவிர் இருக்கமுடியாது, குறிப்பாக, இந்துமதத்தில்.

    மதவியலாளர்கள் இப்படிப்பட்ட கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை.

    ReplyDelete
  8. கள்ளபிரான். வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி. நீங்கள் சொல்வது கொஞ்சம் முரணாகவும், நிறைய உங்கள் கற்பனையும் சொந்தக் கருத்தாகவும் இருக்கிறது.

    //
    நான் பாரதி பக்தனல்ல.// ஆனால் உங்கள் தளத்தில் Favorite books: Bharathiyar. என்ன வித்தியாசம்? மற்ற பாரதி பக்தர்கள் என்ன அவர் படத்தை வைத்து பூஜிக்கிறார்களா?

    //இராமாயணத்தை அவர் நெருங்கவில்லை.// ராமாயணத்தில் வீரம் சொட்டும் விஷயங்கள் இல்லாத மாதிரி இருக்கிறது நீங்கள் சொல்வது. ஒரு படைப்பாளி என்ன எழுதினான் என்று பார்க்கவேண்டும். அவன் ஏன் ராமாயணத்தை, தாஜ்மகாலை, கட்டபொம்மனை, கடிலக்கரையைப் பற்றி எழுதவில்லை என்று நீங்கள் விளக்குவது கொஞ்சம் அதிகமாகப் படுகிறது.

    //உண்டாக்க வேண்டும் என குழந்தைத்தனமாக நம்பினார்.//
    //அவர் சொல்லும் இந்து மதம்//
    //
    பாரதியின் பார்வை ஒரு imperfect view.//
    //மதவியலாளர்கள் இப்படிப்பட்ட கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை.//

    இன்னும் இதைப்போல நிறைய உடான்ஸ் விடுகிறீர்கள். எதை வைத்து இப்படி தீர்மானிக்கிறீர்கள்?

    //பாரதம், ஒரு வீர காவியம் என நீஙகளும் பாரதியும் நினத்தால் அஃது நும்மிருவரின் சொந்தகருத்தே.// வீரமான விஷயத்திற்காக பாரதி மகாபாரதத்தை எடுத்தார் என்கிறீர்கள். ஆனால் அது வீரகாவியம் இல்லை என்கிறீர்கள்.

    அப்புறம் மூடநம்பிக்கைகள் பற்றி ஒரு ஜல்லி. புளிய மரத்துப் பேய், பால் குடிக்கும் பிள்ளையார், மக்களுக்காக உழைக்கும் ஏழை அரசியல்வாதி - இவை அனைத்தும் மூட நம்பிக்கைகளா? கெட்ட நம்பிக்கைகளா. மூட - கெட்ட : என்ன வித்தியாசம்?

    ReplyDelete
  9. முரளி

    //பதிவு அறுமை.//

    பதிவுக்கு வந்த விருந்தாளியை இப்படி கிண்டல் செய்வது நன்றாக இல்லை.

    ReplyDelete
  10. எதிர் கருத்து தவறல்ல. ஆனால் தீர ஆராயாமல் பிதற்றுவது தவறு.
    பாரதியார் ஒரு தீர்க்கதரிசி. அந்நாளில் துரியோதனர் செய்த கொடுமைகளை எதிர்கொண்ட வீரப்பெண் பாஞ்சாலிக்கு உதவ கடவுளை தவிர (கட்டிய கணவர்கள் உட்பட) எவரும் வர மாட்டார் என்பதையும், இந்த காலத்தில் கூட பெண்ணிற்கு நடக்கும் கொடுமைகள் அறவே நின்றுவிடாது , அவள் (பாரத பெண்) தானே தொடர்ந்து கொடுமைகளை எதிர்த்து போராட வேண்டியிருக்கும் என்பதை உணர்த்தவே பாரதத்தில் சபதமிட்ட பெண் வீரப்பெண்ணின் கதையை எடுத்தார். அந்த கதையும் பாஞ்சாலி சபதம் செய்யும் இடத்தில் நிறைவு செய்தார். அதன் பின்னே வந்த (ஆண்களின் வீரம் காட்டும்) போர் அவரது இலக்கல்ல. அவரது இலக்கு பெண்மை வலுவுற எடுத்துரைத்தது.

    ReplyDelete
  11. அனைவர்க்கும் என் மனமார்ந்த வணக்கம்.

    இந்தியனுக்கு கருத்து சுதந்திரம் அதிகம் உள்ளது என்பதை இந்த தொகுப்பு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    பாரதியை பற்றி தவறான கருத்தை தெரிவிக்க யாருக்கும் உரிமையில்லை.

    தயவு செய்து அந்த மாமனிதரை பற்றி தவறான கருத்துகளை இணைய பொது இடங்களில் பகிர்ந்து கொண்டு உங்கள் மதிப்பை குறைத்து கொள்ள வேண்டாம்.

    எம் ஆசான் திருவள்ளூர் வாக்கியப்படி, "இன்னா செய்தாரை அவர் நான நன்னயம் செய்து விடுகிறோம்".

    நன்றி.
    தனஞ்செயன்

    ReplyDelete
  12. பாரதிக்கு ராமாயணத்தை தொடுவதற்கு நேரம் இல்லாததற்கு காரணம் ஆங்கிலேயரிடம் அடிமைகளாய் இருந்த நமக்கு வீரத்தை உயிரிலே உயிர்ப்பித்து இது போல கருத்து 'சுதந்திரம்' பெறுவதற்கு தான்.

    நன்றி.
    தனஞ்செயன்

    ReplyDelete
  13. Please don't reserve the right to criticize Bharathiyar. I do like appreciate his work. But he was a poet, any poet is emotional and wrote about issues affecting at that time.
    He was not a political leader and he didn't have any particular vision for india. His verses are impressive even now because of the emotions he brought in them.


    He took the opinion of leaders at that time to the masses thru his Poems.

    ReplyDelete
  14. நாகு,

    எனக்கு கள்ளபிரான் போல தமிழ் அதிகம் தெரியாது. அருமை அறுமை வித்தியாசம் என்ன என்பது ஒரு ஜோக் மூலம் விளக்கலாமா? ஒரு சிறுவன் தமிழ் வாத்தியாரிடம் 'தகராறு என்று எழுத என்ன ரா போட வேண்டும், சின்ன 'ரா' வா அல்லது பெரிய 'றா' வா என்று கேட்க அதற்கு அவர் தமாஷாக சின்ன தகராறு என்றால் சின்ன 'ரா' போடு, பெரிய தகராறு என்றால் பெரிய 'றா' போடு என்றாராம். அது போல நமது விருந்தினர் பதிவு அருமையோ அருமை அதனால் பெரிய 'றா' போட்டு விட்டேன். ஹி ஹி. (நல்ல வேளை மீசைல மண் ஒட்டல).

    (அப்பாடா ஒரு 'றா' தப்பா போட்டுட்டு பதில் சொல்றதுக்குள்ள இப்படி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குது, எப்படி பாரதி மாதிரி ஒரு மகா மகா கவியை வெறும் பார்ப்பனர் என்று பார்க்கும் கள்ளபிரான் போன்றவர்களுக்கு கூசாமல் பேச (எழுத) முடிகிறது.

    முரளி.

    ReplyDelete
  15. //(நல்ல வேளை மீசைல மண் ஒட்டல).//
    அப்படியா? உங்கள் முகமே தெரியாததால், மீசையைக் கவனிக்கவில்லை. :-)

    பாரதி 'மாத்தி யோசி'த்து, பார்ப்பனர்களை விரோதித்துக் கொண்டு கடைவழிக்கு டஜன் பேர்களுக்கு மேல் தேற்ற வழியில்லாமல் சாகலாம். ஆனால் கள்ள பிரான் போன்றோர்களுக்கு அவன் இன்னும் பாப்பான்தான். அவன் இன்னும் என்னதான் செய்திருந்தாலும், அவனுடைய பாப்பான் முத்திரை போகாது இவர்களுக்கு.

    இதுபோலத்தான் காந்தி வாங்கிக் கொடுத்த சுதந்திரத்தில் வளர்ந்த இந்தியர்கள், காந்தியை தூஷிப்பதைக் கேட்டு என்னுடைய தென்னாப்பிரிக்க இந்திய நண்பர்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

    ReplyDelete
  16. பாரதி பற்றிய விமர்சனத்துக்கு ஒருவர் பாரதி பக்தனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்பொழுதெல்லாம் பாரதியின் பாடல்களில் உள்ள சமூகக் கருத்துக்கள் சீர்திருத்த விளக்கங்கள் எல்லாம் உள்நோக்கம் கொண்டவை என்று எழுதி விமர்சனம் செய்யும் கட்டுரைகள் தமிழில் நிறையவே உண்டு.

    ஆயிரம் உண்டிங்கு சாதி
    எனில் அந்நியர் புகல் என்ன நீதி ?

    என்ற பாரதி பாடலை சுட்டி காட்டி பாரதி சாதி அமைப்பை நியாயப்படுத்திருப்பதாக சொல்லும் பகுத்தறிவாளர்கள் கூட உண்டு. எல்லா சீர்திருத்தக் கருத்துகளும் என்னிடத்தில்தான் தொடங்குகிறது என்று என்னும் வக்கிர விமர்சனங்களுக்கு அடிப்படை எதுவும் தேவையில்லை.

    ஒரு கவிஞன் எழுதியுள்ளதை பற்றிய விமர்சனத்தில் அவன் ஏன் இன்னொரு விஷயத்தை பற்றி எழுதவில்லை என்று ஆராய்வது சரியான் முறையாக தெரியவில்லை.

    பாரதி இராமாயணம் பற்றி எழுதாதது குற்றம் என்றால் அந்த குற்றத்துக்கு திவ்யபிரபந்தம் பாடிய எல்லா ஆழ்வார்களும் ஆளாக நேரிடலாம்.

    திருமால் பெருமையை பாடிய ஆழ்வார்கள் அனேகமாக எல்லோரும் பாரத கதை மற்றும் பாகவத கதைகளில் வரும் சம்பவங்களையே குறிப்பிட்டு பாசுரங்கள் பாடியிருக்கிறார்கள். உதாரணமாக ஆண்டாள் திருப்பாவையில் ஒரே ஒரு பாசுரத்தில் மட்டுமே ராமாயண செய்தி பற்றிய குறிப்பு வருகிறது. மற்ற பாசுரங்கலில் பாரதம், பாகவதக் கதைகள் பற்றிய கருத்துக்களே திரும்ப திரும்ப பேசப்படுகிறது. இன்னும் உதாரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

    EPIC என்ற ஆங்கிலச் சொல்லுக்கு வீரகாவியம் என்று பொருள் செய்வது தமிழ் இலக்கிய மரபு. அந்த முறையில் ராமாயணமும் பாரதமும் வீரகாவியங்களாக ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. காலம் காலமாக தொடர்ந்து வாழும் சமூகம் கொடுக்கும் மதிப்பீடுதான் வீரகாவியம் என்ற பெருமைமிக்க குறியீடு. அதை பார்க்க, ஏற்க மறுத்து, கண்ணை மூடிக்கொள்ள, எல்லா தனி நபர்களுக்கும் உரிமை உண்டு.

    பாரதியார் குழந்தை உள்ளம் கொண்டவர். ஆனால், வீரகாவியத்தை புதிய முறையில் பாடுவதன் மூலமே சுதந்திர போராட்டததில் ஈடுப்பட தேவையான் வீரத்தை ஏற்ப்படுத்த முடியும் என்று நம்பும் குழந்தை தனம் அவரிடம் இருந்ததில்லை. தொன்மங்களை குறிப்பிடம் இலக்கிய மரபையொட்டி எழுதினார்.
    வீர உணர்வை ஏற்ப்படுத்த களத்திலும் இறங்க வேண்டும் என்று தீர்மானித்து அரசியலில் இறங்கிய முதல் தமிழ் கவிஞன் பாரதிதான்.

    எந்த நம்பிக்கையும் பொய்யாகலாம் முன்பின் தெரியாத நபர் மீது வைத்த நம்பிக்கை ஈடேறலாம். முப்பது ஆண்டு பழகிய நண்பர் மீது வைத்த நம்பிக்கை பொய்யாகலாம்.

    காரண காரியத் தொடர்பு இல்லாத, தர்க்க ரீதியாக ஒப்புக் கொள்ளமுடியாத நம்பிக்கைகளைத்தான் மூடநம்பிக்கை என்கிறோம்.

    மதமும் கடவுளும் மட்டுமே தீர்வு என்று நம்புவர்கள் நம்பிக்கை மூடநம்பிக்கையாக முடியலாம். மதம் தீர்வு மட்டும் அல்ல, மதம் ஒரு ஆறுதல் என்று நம்புவோர்க்கு அது மூடநம்பிக்கையாக முடிவதில்லை.
    Religion is not a solution. Religion is a solace.
    மு. கோ

    ReplyDelete
  17. //நான் பாரதி பக்தனல்ல.// ஆனால் உங்கள் தளத்தில் Favorite books: Bharathiyar. என்ன வித்தியாசம்? மற்ற பாரதி பக்தர்கள் என்ன அவர் படத்தை வைத்து பூஜிக்கிறார்களா?//

    Favorite books are those books which one frequently refers to. One may refer to such books for many reasons. I do refer to all his books, for a variety of reasons. But, nowadays, to know who really the person called Bharatiyaar was. This is because I have just started a blog where I want to go deep into the matter of his social and private personality. Thus, a series on him, 'Baarthi enrooru maanudan' has started by me. It will go on for many months.

    //மற்ற பாரதி பக்தர்கள் என்ன அவர் படத்தை வைத்து பூஜிக்கிறார்களா?//

    That is their private matter. For me, whether he has become a cult in society or not, is important. From the feedback here, and outside, it is obvious that there is impatience to pillory anyone who crticises the poet. A blind love, an inability to see him as he was, marks these deliberations. There is no doubt a Bharati cult.

    ReplyDelete
  18. //எதிர் கருத்து தவறல்ல. ஆனால் தீர ஆராயாமல் பிதற்றுவது தவறு.
    //

    Dissenting views are the ethir karuthu.

    Jeyakaanthan welcomes dissenting views but what those views should be, should pass his test. If such views dont fall into his definition, they should be called pathaRRal.

    This reminds me of now fashioable English proverb:

    One man's terrorist is another man's freedom fighter.

    ReplyDelete
  19. //அவரது இலக்கு பெண்மை வலுவுற எடுத்துரைத்தது./

    His views on women are not goody-goody. He views women from his stand of being a man. This is commonly found in so many men. Modern feminists accusation.

    In the same epic, he wrote Pettaippalambalkal.

    On this subject, my blog will expatiate soon

    ReplyDelete
  20. //பாரதியை பற்றி தவறான கருத்தை தெரிவிக்க யாருக்கும் உரிமையில்லை.
    //

    You have already decided about the views of others on Bhrati. You are sure all such views are thavaraana.

    This is what I call bharati cult.

    No one reserves the right to stop criticism on the poet. He is called national poet. Do you hve assumed the right to that national poet and his works?

    To say that he held this and that views is not an insult to the poet.

    ReplyDelete
  21. //பார்ப்பனர் என்று பார்க்கும் கள்ளபிரான் போன்றவர்களுக்கு கூசாமல் பேச (எழுத) முடிகிறது//

    Bharati never disowned himself as a brahmin. He was always called Iyerwaal by his friends, including VOC. Rememeber that.

    Your fallacy comes from your opinion that the word paarppanar should be dergoratory only; and call anyone a parappnar is bad. This is not a correct view. To be a paarppanar and to follow parppanaeeyam - is never derogatory. You hve fallen into the cunning net of Dravidian parties.

    Bharti believed in varnashramdharam and attacks tamil brahmins for not following it.

    I will write more on it in my blog.

    Please read his poem with open mind. Not as a follower of barati cult.

    ReplyDelete
  22. //தயவு செய்து அந்த மாமனிதரை பற்றி //

    This is cult.

    No man is perfect.

    Even God has been quetioned by Tamils:

    Nettrikan thirappinum kutram kutramee.

    Making him into an iconic figure or cult figure is an insult to that poet who never pretended to be grater than you and me.

    ReplyDelete
  23. //ஆயிரம் உண்டிங்கு சாதி
    எனில் அந்நியர் புகல் என்ன நீதி ?

    என்ற பாரதி பாடலை சுட்டி காட்டி பாரதி சாதி அமைப்பை நியாயப்படுத்திருப்பதாக //

    You may read his poems again. What he believed in and what he did not, will come out clearly from his poems.

    He beleived in varnahsradharam.

    Munnaalin paarnar veedmem oothuvaar
    mummaari poziyumadaa vaanam.

    This is his anguish. Brahmins are not following the brahminism. Hence, the decay of society.

    Also he wrote in the poem about cats, where he said, every caste has their assigned duty which they should follow.

    I am unable to write in Tamil because of some problem with computer.

    ReplyDelete
  24. G.Arvind,

    I have just touched only one point; but your entire message can be easily rebutted, with evidences from the poet's work.

    He has strong views on many things. They put them in his work clearly and forcefully.

    On women
    On caste
    On brahmins
    On Independence
    On Hindutva
    On Englishmen

    etc.

    Each one can be taken out and analysed.

    He is a common asset of Tamilis. We, as Tamilians, have the right to view our poets and refresh the views time and again.

    Every generation should read the poet afresh.

    No one should become a cult figure in our society. No self-respecting people should allow this. Except God, to none else, we are slaves mentally. NAAMAARKKUM ANJOOM NAMANAI ANJOOM. This is Tamil people's motto of life. Let it flourish for ever.

    A society in need of cults to worship, can never progress. It is a slave society.

    Bharati can be taken out for analysis by anyone who knows Tamil. If the resultant opintion of such a person is against our long-cherished view - which you have not got ourselves but have been brainwashed to accept - to call the dissenting views pithaRalakla is illiterate.

    Educated people welcome dissenting views. If not, you cant live in a democracy happily. Please go and live in a dictatorship.

    All poets, all political leaders, all social icons, whether living or dead, should be subject to our scrutiny. If dead, their legacy should be examined carefully and to see whether the legacy can be

    1. swallowed hook, line and sinker
    or,
    2. thrown off lock, stock and barrel,

    3.or, accepted mutatis mutandis.

    Ultimately, we are supreme, not the iconic figures.

    This is my concept of individualism by which I live every minute. Bharati is taken by me in my blog as a first entry. Other iconic figures of Tamil society are waiting in the row for dissection on my table one by one.

    I dont force my principle here.

    No one is my hero. I am slave to none.

    I like or dislike, accpet or partly accept, any one, howsover MAAMANITHAN he is, only on my own terms.

    KALLAPIRAN

    ReplyDelete
  25. Kallapiran - favorites are what you love/like. Not refer. I refer the dictionary every day. It's not my favorite. :-)

    I am not sure you understand what a cult is. Cult is what people follow without questioning. I will give you one example in TN that you can relate to.

    Annadurai following is a cult. You can not list his achievements or greatness. He may be a great scholar. But so was my high school english teacher. I can list from my knowledge EVR for rationality, Kamaraj for education/schools, Karunanidhi for abolishing human-pulled rickshaw and literary works, MGR for free meal(whether its good or bad is different matter :-). But Anna - zero, zilch. But you hear about him all these years. That is cult. I once asked a strong DMK person anna's claim to fame - after much thought he said - Anna legalized seerthirutha kalyanam. The one DMK people perform after or before ritualistic kalyanam :-)

    That too - ended in decreasing employment(for paarpaans) and not generating any employment for anyone else. Oh yeah - he introduced liquor back.

    So there is no cult following Bharati. No one does what he advocated. Or follow his ideals. So where is the cult?

    ReplyDelete
  26. பாஞ்சாலி சபதம் ஒரு இணையற்ற இதிகாசம்.அதைப் படிக்குந்தோறும் பலவிதமான உணர்ச்சிகளை நம்முள் தோற்றுவிக்கும்.ஆனால் மகாகவி பாரதி அக்காவியத்தை வெறுங்கதை என்றெண்ணிப் பயன்படுத்தவில்லை.அதில் வரும் பாத்திரங்கள்
    ஒவ்வொன்றும் கும்பினியார் ஆட்சிக் காலத்தில் நம்மிடையே உலவி வந்த உயிரோவியங்கள்.பேராசையும் ,இறுமாப்பும் கொண்ட ஆங்கிலேயர்களை கௌரவர்களாகவும், தீவிர சுதந்திர தாகமும் ,தன்மான உணர்ச்சியும் கொண்ட இந்தியர்களை பாண்டவர்களாகவும் உருவகப்படுத்தி சித்தரித்திருந்தார் பாரதியார் .பாஞ்சாலி சபதம் படைக்கும் காலமெல்லாம் பாண்டிச்சேரியில் தன்
    நண்பர் குழாம் (வ.வே.சு.அய்யர் ஆகியோர் ) புடை சூழ உரையாடலில் உருவானதே ஆகும்.நம் எழுத்தாள நண்பர் கூறியது போல் அல்ல.இதை எனக்கு
    அறிய வைத்தது பாரதியாரின் கொள்ளுப்பேரன் ,பிரபல பாடகர் திரு.ராஜ்குமார்
    பாரதி அவர்களே!

    ஸ்ரீ நிவாசன்

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!