Tuesday, June 30, 2009

பட்டாம்பூச்சி!

நம்ம முன்னாள் ரிச்மன்ட்வாசியான சதங்கா வழக்கம்போல தனிக்கட்சி ஆரம்பிச்சு கலக்கிவிட்டு விகடன் போல பல இடங்களிலும் தன்னோட பதிவை போட்டு அசத்தி எனக்கு சுட்டி அனுப்பியிருகாருன்னு நம்பி ஓபன் பண்ணினா, நம்மளையும் ஒரு பதிவருன்னு மதிச்சு இந்த பட்டாம்பூச்சி விருதை வழங்கியிருக்காரு சதங்கா! நன்றி! கூடவே சிலபல கண்டிசன் வேற! சரி நமக்கு தெரிஞ்ச யாராவது இன்னமும் பட்டாம்பூச்சி பிடிக்காம இருக்கங்களான்னு துலாவ ஆரம்பிச்சேன்.


மொதல்ல அகப்பட்டவர் எங்க ரி.த.ச வின் தானைத் தலைவர் முரளி. தமிழ்தென்றல் ஆரம்பிச்சு பின்னே கலைச்சோலையில் தொடர் கதைகளை எழுதுவதோடு எங்க தமிழ் சங்க பதிவுகளுக்கு தவறாம பதிவுகளையும் படிச்சு பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்துபவர். பிடியுங்கள் விருதை!

எல்லோரும் பதிவுக்கு மேட்டர் தேடி மெனக்கெட்டு ஒரு பக்கம் சேர கஷ்டப்பட்டு கொஞ்சம் மொக்கை கொஞ்சம் மேட்டருன்னு போட்டு பதிவை பண்ணிக்கொண்டு இருப்போம். ஆனா இவரு மட்டும் எங்கிருந்துதான் அட்டகாசமான வித்தியாசமான படங்களை கண்டுபிடுச்சு அதுக்கு அருமையான கடிகளையும் போட்டு அசத்துபவர். வாருங்கள் பரதேசியாரே, பிடியுங்கள் விருதை!

லேட்டா வந்தாலும் வசந்த காலத்தில் தோட்டகலை பற்றி விளக்குவதுடன் நல்ல சம்பவங்களை பதித்து சிறப்பாக ப்ளாகில் வலம் வருபவர். சம்சாரம் அது மின்சாரம் கேள்விப்பட்டிருப்பீர்கள், இவர் எழுதிய மின்சாரம் அது சம்சாரம் படியுங்கள் உபயோகமான பதிவுகளை வழங்கி வரும் வசந்தமே எனது அடுத்த சாய்ஸ்!

எனக்கு இந்த விருதை வழங்கிய சதங்காவிற்கு நன்றி! விருது பெரும் மூவருக்கும் வாழ்த்துக்கள்!!!

Butterfly Award

நீங்கள் பின்பற்ற வேண்டிய பட்டாம்பூச்சி விருதின் விதிகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும்

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும்

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும்

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும்

12 comments:

  1. பரதேசிக்கு பட்டாம்பூச்சி வழங்கிய பரோபகாரி ஜெயகாந்தன் அவர்களே நன்றி! நிறைய பதிவுகள் போட வேண்டும் என்று எண்ணம். முன் போல் போதிய நேரம் கிடைப்பதில்லை. நேரம் கிடைக்கும்போது மறவாமல் என்னால் முடிந்தவரை பதிவிடுகிறேன். தமிழ்சங்க ப்ளாக் தளம் படு பிஸியாகிவிட்டது. பதிவிடும்/பின்னூட்டமிடும் ப்ளாகிகளுக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. பட்டாம்பூச்சி விருது பெற்ற முரளி, பரதேசி மற்றும் வசந்தம் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். சதங்கா கையால் விருது பெற்ற ஜெயகாந்தனுக்கும் வாழ்த்துக்கள். விருது பெற்று கண் சிமிட்டரத்துக்கு முன் படு வேகமா உங்க பட்டாம்பூச்சி பதிவு போட்டுட்டீங்களே. வாவ்!

    ReplyDelete
  3. நல்ல வேகமா பட்டாம்பூச்சி பறக்கவிட்டதற்கு வாழ்த்துக்கள். விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. பரதேசியாரே, உங்க சார்பா மூணு பேரை இழுத்து விடுங்க!

    திகழ்மிளிர், வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    நன்றி மீனா, நாகு !

    ReplyDelete
  5. ஜெய் ஹோ !!!

    //விருது பெற்று கண் சிமிட்டரத்துக்கு முன் படு வேகமா உங்க பட்டாம்பூச்சி பதிவு போட்டுட்டீங்களே. வாவ்!//

    என் எண்ணமும் இதுவே. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

    ReplyDelete
  6. ஜெயகாந்தன்
    என்னது எனக்கு விருதா!!!!!!! ஒ கூடவே ஒரு பதிவு எழுதனுமா அது சரி. எல்லோரும் ஒரு யாழ் எடுத்துக்கங்க அதான் துன்பம் நேர்கையில் யாழ் எடுத்துன்னு பாரதிதாசன் பாடியிருக்காரே. பட்டாம்பூச்சி விருதிற்கு நன்றி. இன்ன்னிக்கு கண்டிப்பாக ஒரு பதிவு போட்டு தாக்கிட்டா போச்சு.

    முரளி

    ReplyDelete
  7. நன்றி சதங்கா!

    முரளி!
    அதுதவிர,
    நீங்கள் பின்பற்ற வேண்டிய பட்டாம்பூச்சி விருதின் விதிகள்:

    1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும்

    2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும்

    3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்

    4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும்

    5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும்

    ReplyDelete
  8. பறக்க விட்டவருக்கும், பறக்க விட போறவங்களுக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  9. வசந்தந்தின் புலம்பல் (விவேக்கின் புலம்பலாக எடுத்துக் கொள்ளுங்கள்)
    அய்யா! பெரியோர்களே தாய்மார்களே!! இப்பதான் ஏதோ தட்டு தடவி பட்டாம் பூச்சி விருதுன்னா என்னன்னு தெரிஞ்சிக்க முயற்சி செய்து கொண்டிரும்க்கும் வேலையில்.. நேரா மேடைக்கு குண்டு கட்டாக துக்கிவந்து விருதையே கொடுதுட்டேங்களே.. இதை எங்க சொல்ல.. யாரிடம் சொல்ல.. ஏதோ அடி ஒதை ஒன்னும் கொடுக்காம விருது கொடுதுருக்கஙகளே...


    விருது கொடுத்த ஜெயகந்தனுக்கும் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.. வசந்தம்.

    ReplyDelete
  10. நன்றி கவிநயா.

    வசந்தம், புலம்புனுமளவுக்கு வரவேச் சுட்டேனா?! உங்க கேபாசிடி உங்களுக்கே தெரியல. விருது கொடுத்து ஊக்கப்படுத்துவது நிறைய எழுதுவதற்கே!

    ReplyDelete
  11. This site was... how do you say it? Relevant!! Finally
    I have found something that helped me. Many thanks!

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!