Wednesday, June 03, 2009

ஹையா(யோ) இந்தியா போறோம் (நான்காம் பாகம்)

பயண நாள் நெருங்கி விட்டது (இரு வாரங்களே உள்ளன)

அய்யோடா சாமி. இன்னும் ரெண்டு வாரம் தான் இருக்கு. சரி இன்னிக்காவது பெட்டிகளெல்லாம் எடுத்து பரத்துவோம்னு பார்த்தோம். ஆனா அதுக்கு முன்னாடி ஒரு பெரிய, முக்கியமான, வேலைய மறந்துட்டோமே. திடீர்னு ஒவ்வொரு பட்டியலையும்   ஒவ்வொருத்தர் கையில எடுத்துக்கொண்டு ஒவ்வொரு பக்கமா போய் ஷாப்பிங் ஆரம்பிச்சோம். போன weekend முழு நேரமும் இதுலேயே ஓடி போச்சு. இதுல சில சாமான்கள் ஸ்டாக் வேற இல்ல. எப்படி இருக்கும். இந்த மாதிரி எவ்வளவு பேர் கிளம்பி/கிளம்பி கொண்டு  இருக்கோம்? எல்லாரும் அதே பொருட்கள். அதே கடைகளில் தானே ரவுண்டு கட்டி வாங்குகிறோம். எப்படி கிடைக்கும்ங்கரேன்? எங்கள மாதிரி சோம்பேறியா இல்லாம, ஒரு படை எங்களுக்கு ஒரு வாரம் முன்னாடியே கெளம்பிட்டாங்கையா கெளம்பிட்டாங்கய்யா ! (வடிவேலு ஸ்டைல்).

ஷாப்பிங் எல்லாம் ஓரளவிற்கு முடிஞ்சு ஒரு வழியா பொருட்களையும் பெட்டிகளையும் சேர்த்து வெச்சு பார்த்தோம். இப்போ தான் எங்களோட சபதங்களுக்கெல்லாம் வெச்சாங்கடா ஆப்பு! ஒரு எண்ணம் ஸ்திரமாக நிர்ணயமானது.

முதல் ரவுண்டு பாக்கிங்லியே பெட்டிகள் எண்ணிக்கை சும்மா அசால்டா ஐந்தை தொட்டது. ஒவ்வொன்றிலும் எடையாவது குறைச்சல் என்கிறீர்களா? ம்ம் ஹ்ம்ம். எல்லாம் வெகு எளிதில் 50lbs தொட்டாச்சு. இப்போ தான் எங்களுக்கு ஆறாவது பெட்டியே இல்லை என்கின்றன  ஞானோதயம் வந்தது. இனி பெட்டி ஒண்ணு வாங்கி அதுல இன்னும் கொஞ்சம் சாமான்களை அடைக்கணும். கையில் எடுத்து செல்லும் பெட்டிகளுக்கும் ததும்பி வழிகின்றன.

இனி ஸ்டாக் வந்தப்பறம் கடைசி நிமிஷத்துல இன்னொரு முறை முயற்சி செய்யணும். அதுகளுக்கு வேற எடம் வெச்சுக்கணும் பெட்டிகள்ல. இது என்ன சோதனை.

ஈஸ்வரோ ரக்ஷது.

ஏர்லைன் கம்பெனிகள் 70 பவுண்ட்டிலிருந்து 50 பவுண்டிற்கு மாற்றியும் இந்நிலை. தலைக்கு ஒரு பேக் என்ற நிலைமை வந்தாலும் வந்துவிடும் போல, வெகு விரைவில். நாங்களாவது 50lbs ல நிறுத்திட்டோம். சிலர் அதுல கூட கொசுருக்கென்று  கொஞ்சம்  கூடுதலா  அடைக்கறாங்கபா.

நாராயணன்

இனிவரும் பாகங்கள்:
ஐந்தாம் பாகம்: பயணத்துக்கு தயார்.
அதற்குப் பின் வரும் பாகங்கள் இந்தியாவிலிருந்து தொடரும்.

2 comments:

  1. :-)

    எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் கைல கொண்டுபோற பைலியே நாப்பது பவுண்டு கொண்டுபோனார். எல்லாம் முகராசி. நான் ரெண்டு பவுண்டுக்கு மேல போனாலே கழுத்த பிடிக்கறாங்க...

    ReplyDelete
  2. மிகவும் ரசிக்கிறேன். என் முழு மறு மொழியும் தொலை பேசியில் தெரிவிக்கிறேன்

    நன்றி. வசந்தம்

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!