Sunday, May 31, 2009

முடி யாது? முடியாது

நானும் ஒரு பேரு வச்சுக்கலாம்னு யோசிச்சு ஒரு பேரு கண்டு பிடிச்சு வச்சுக்கிட்டேன். பெயரைப் பற்றி அலசாமல் என் படைப்புகளை அலசவும்.

என் பேர் வேதாந்தி.

வேலை இல்லாதவன் தான் வேதாந்தம் பேசுவான். ஒரு வகையில் எனக்கும் அது பொருந்தும்.



முடி யாது? முடியாது. - அர்த்தம்


என் மகளுக்கு தான் முடி மேல் எவ்வளவு ஆசை.
முடி வெட்ட மறுக்கும் அவளுக்கும்
முடியாது என மறுக்கும் என் மனைவிக்கும் தான் தெரியும்.
இங்கே பிறந்தது என் வேதாந்தம்.
என்னால் முடிந்தது அவ்வளவு தான்
என் கொஞ்ச முடி மேல் ஆசையால் வேதாந்தம் எழுத ஆரம்பித்தேன்.
முடி மேல் யாருக்கு தான் ஆசை இல்லை
முடி சூடா மன்னருக்கும்
முடியே இல்லாத வழுக்கையருக்கும்
முடி யாது என்று எண்ணும் வேதாந்திக்கும்
முடியாது என்று மறுக்கும் என் மகளுக்கும்
வரலாறு சொன்னதோ முடியால் தொல்லை
முடியாத மொகலாயர் செய்தனர் கொலை
முடி யாது என்று ஆராய்ந்தால் இல்லை ஓர் எல்லை
முடி மேல் யாருக்குத்தான் ஆசை இல்லை
அன்று அரசன் தான் அலைந்தான் முடி சூட
இன்று அரசியல்வாதி அலைகிறான் முடி சூட
அன்றைய மங்கையர் முடிந்தால் முடி அழகு
இன்றைய மங்கையர் முடியாமல் முடி அழுக்கு
இது தான் இன்றைய இழுக்கு என்பார் வழக்கு பேசுபவர்
அது தான் இன்றைய இலக்கு என்பர் மறுசாரார்

ஒரு முடியை தேடினான் வராகன்
மறு முடியை தேடினான் நான்முகன்
முடியில் இருந்து விழுந்தாள் தாழ் முடியாள்
முடியை பார்த்தேன் என்றதால் இழந்தாள் முடியை
முடியால் எவ்வளவு தொல்லை

எனக்கோ எப்படி முடிப்பது என்பது தான் எல்லை
அதனால் முடிக்கிறேன் என் சொல்லை
உங்களுக்குத் தான் எவ்வளவு தொல்லை
முடியாது என்று சொல்லாமல் நீங்க்ளும்
முடி யாது என்று வேதாந்தம் பேச வாருங்கள் என்னுடன்.

வேதாந்தி

3 comments:

  1. 'முடி'யே போச்சு என்று விட்டு விடாமல் இந்த இரண்டெழுத்து 'முடி'யில் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை அலசி கலக்கியிருக்கிறீர்கள் வேதாந்தி! தமிழ் சங்க ப்ளாகியானதற்கு வாழ்த்துக்கள்! 'முடி' யிலிருக்கும் முடியை அவிழ்த்து விளக்கியதற்கு பாராட்டுக்கள். மேலும் எழுத வேண்டுகோள்.

    ReplyDelete
  2. வருக வேதாந்தி அவர்களே,

    என்னது வேலை இல்லாதவன் வேதாந்தம் பேசுவானா? நல்லா இருக்கே உங்க உடான்ஸ்.

    ஒரு மத்திய வயது பெண்மனி அடுத்த வீட்டு பெண்மனியிடம் தனது கணவரைப் பற்றி பெருமையாக பேசிக்கொள்ளும் போது சொன்னாள், "என் கணவருக்கு 52 வயது ஆகுது ஆனால் ஒரு முடி கூட நரைக்க வில்லை" என்று அடுத்தவள் கேட்டாள் "அது எப்படி" என்று. முதலாமவள் சொன்னாள் "அதுவா, அவர் தலை வழுக்கையாகி ஒரு 10 வருஷம் ஆச்சு அதனால்" என்று.

    ஆமாம், முடி பற்றிய இத்தனை பெரிய அலசலில் கவரிமானைப் பற்றி ஏதும் சொல்லவில்லையே, அது அடுத்த பதிவில் வருமா?

    முரளி.

    ReplyDelete
  3. நாகு மற்றும் முரளி அவர்களுக்கு

    உங்களின் ஊக்கத்திற்கும் பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி.
    என் முடியை பற்றி யோசிக்கும் போது கவரிமானை பற்றி யோசிக்க தோன்ற வில்லை. நினைவு படுத்தியதற்கு நன்றி. அடுத்த முறை மிக்க யோசித்து எழுதுகிறேன்.

    - வேதாந்தி

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!