Monday, December 08, 2008

வலை வலம்!

ஒலி பரிமாற்றுச் சேவை (VOIP)



முந்தைய பதிவில் நாகு கூகிளில் இருந்து "Video / Voice" அரட்டையடிப்பது பற்றி எழுதியிருந்தார். இணையத்தின் பல நல்ல வசதிகளில் ஒன்று VOIP (Voice over Internet Protocol) எனப்படும் ஒலி பரிமாற்றுச் சேவை. பல நிறுவனங்கள் இது போன்ற சேவைகளை தற்போது வழங்கி வருகிறது. சில சேவைகளை பாவிக்க உங்களுக்கு விசேட உபகரணங்கள் (Broadband Internet, VOIP Router) தேவைப்படும். இதற்கு மாதச் சந்தா கட்டினால், சில நிறுவனங்கள் Router இலவசமாக வழங்குகிறன. சந்தா இல்லாமல், விசேட உபகரணங்கள் இல்லாமல் உலவியிலிருந்தே தொலைபேசிகளுக்கு (PC-to-phone) பேசவும் இப்போது வசதிகள் உள்ளன! அந்த வகையில் www.freeringer.biz என்ற இணையதளத்திலிருந்து சுமார் 30 நாடுகளுக்கு இலவசமாக உலவியிலிருந்தே தொலைபேசிகளுக்கு பேசலாம்! இதை பாவிக்க எந்த மென்பொருளையும் நீங்கள் தரவிறக்கம் செய்ய வேண்டியதில்லை என தெரிவித்துள்ளனர்! (சோதித்ததில் இதற்கு "Adobe Flash Player" மட்டும் தேவைப்படும் என தெரியவந்தது.). இதை பாவிக்க உங்களிடம் Broadband இணைப்பு தேவைப்படும். இல்லாவிட்டால், நீங்கள் பேசி 2 நிமிடம் கழித்து எதிரே உள்ளவருக்கு போய்ச்சேரும். (இந்த நிறுவனத்திற்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை).


பி.பி.சி இணைய வானொலி:

சிலருக்கு தமிழில் கட்டுரைகள் வாசிப்பது சற்று சிரமமாக இருக்கும். அதுவும் பல பக்கங்கள் கொண்ட கட்டுரைகள் வாசிப்பதற்கு பொறுமையும் அவசியம். அந்த சிரமங்கள் இல்லாமல் நல்ல விடயங்கள் "ஒலி" வடிவத்தில் இருந்தால் எவ்வளவு வசதி! BBC இணைய தளத்தினில் நம்மில் பலரும் அடிக்கடி உலவியிருப்போம். அதில் பல நல்ல "ஒலி" தொடர்கள் உள்ளன. அதிலிருந்து உங்களுக்காக சில இங்கே:


1. நெஞ்சம் மறப்பதில்லை

நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்கள், சிரிக்கவைத்த சிந்தனையாளர்கள், சிந்திக்கவைத்த இயக்குநர்கள் என்று தமிழ் திரையுலகில் முத்திரை பதித்த வித்தகர்கள் பற்றிய தொடர். சம்பத்குமார் தயாரிப்பில். இங்கே கேட்கலாம்

2. தமிழிசை - ஓர் வரலாற்றுப் பார்வை
தமிழ் இசையின் வரலாறு கூறும் இந்தத் தொடர், தமிழ் இசையின் தொன்மை, அதன் பரிமாணங்கள், வளர்ச்சிப் போக்கு, அது எதிர்கொண்ட மாற்றங்கள் ஆகியவை பற்றிப் பேசுகிறது. இசைக் கலைஞர்கள், மற்றும் இசைத்துறை ஆராய்ச்சியாளர்கள், நிபுணர்களின் கருத்துக்களைத் தாங்கிவருகிறது இந்தப் பெட்டகத் தொடர். ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிபரப்பாகும் இத்தொடரைத் தயாரித்து வழங்குவது BBC சென்னை நிருபர் த.நா.கோபாலன்

3. பாட்டொன்று கேட்டேன்
அக்காலத்து 'மன்மத லீலையை வென்றார் உண்டோ' முதல் இன்று உங்களை தாளமிடவைக்கும் 'மன்மத ராசா!' வரை தமிழ்த் திரையிசை நடந்துவந்த பாதையைப் படம்பிடிக்கும் வரலாற்றுத் தொடர், சம்பத்குமார் தயாரிப்பில்.


மேலும் சில சுட்டிகள்:

1. தமிழோசை: நேரடி ஒலிபரப்பு

2. செய்தியறிக்கை: (மறு-ஒலிபரப்பு - On-Demand)

3. தமிழ் பண்பலை:: (மறு-ஒலிபரப்பு - On-Demand)


உதவி: கணினியில் தமிழோசை கேட்பதற்கு வகைசெய்யும் ஒலிச் செயலியை பெறுவது எப்படி?


கூகிள் மொழி மாற்று செயலி:

நமது வலைபக்கத்தில் தமிழில் தட்டச்சு செய்ய உதவி பக்கம் இருப்பினும், சிலருக்கு அவற்றை பாவிக்க சற்று கடினமானதாக(!) இருக்கிறது என்று கூறியுள்ளனர். சிலர், "நான் ஆங்கிலத்தில் எழுதி தருகிறேன், நீங்களே தமிழுக்கு மற்றிக் கொள்ளுங்கள்" என்று பின்வாங்கிவிடுவதுண்டு! அவர்களுக்காகவே இந்த மொழி மாற்று செயலியை கூகிளாண்டவர் கொடுத்துள்ளார். ஆங்கிலத்தில் தமிழ் வார்த்தைகளை "பொனெடிக்" முறையில் தட்டச்சு செய்தால் அதை தமிழில் உடனே மாற்றி காட்டும்!! உதாரணத்திற்கு, "sangam" என்று தட்டச்சு செய்தால் அதை "சங்கம்" என மாற்றிடும்.

அதே போல தட்டச்சு செய்த வார்த்தையின் மேல் சொடுக்கினால், அதனை பல விதங்களில் காட்டும் (ஆனால், செயலியே சரியான எழுத்துக்களை தேர்ந்தெடுப்பதும், பிழையான வார்த்தையை சுட்டிக்காட்டிடவும் இன்னமும் வசதிகள் இல்லை!). நீங்கள் தட்டச்சு செய்தவற்றை ஈமெயில் அல்லது கோப்புகளில் வெட்டி ஒட்டிக் (Copy & Paste) கொள்ளலாம்! இதுவும் மிகச்சுலபமான முறையில் தமிழில் தட்டச்சு செய்ய உதவும் கருவி! ஆங்கில பிழை திருத்தி போன்ற வசதிகள் கொண்ட தமிழ் தட்டச்சு செயலிகள் இன்னமும் சில காலத்தில் வந்துவிடும். மேலும் விபரங்கள் மற்றும் உதவி பக்கத்தை இங்கே காணலாம்


சில நாட்களாக நாகு வலை வலம் பற்றி சொல்லாததால், நான் அறிந்த சில தகவல்களை இங்கே கொடுத்துள்ளேன்..

4 comments:

  1. நல்ல தகவல்கள். நன்றி

    ReplyDelete
  2. //சில நாட்களாக நாகு வலை வலம் பற்றி சொல்லாததால்//
    யாருமே இந்த பக்கம் காணோமேன்னு நான் மட்டும் எழுதிக்கிட்டு இருந்தா, இந்த மாதிரி கூட கம்ப்ளெய்ண்டு வருதா? நேரமய்யா...

    ஏதோ எப்படியாவது எழுதினா சரி. ஆனால் இந்த மாதிரி நில ஆக்கிரமிப்பு எல்லாம் ஜாஸ்தியா படல? :-) நடத்துங்க...

    செயலாளர் வேற - ரொம்ப சொன்னா நம்பள கட்டம் கட்டிடப் போறாரு.

    நீங்க சொன்ன வாய்ப்தளம் போய் பார்த்தேன். இப்போதைக்கு நான் குடியிருப்பது freecall.com. சுத்தமாக இலவசம் இல்லாவிட்டாலும் இந்தியாவுக்கு அழைப்பதில் சொத்தழியாமல் இருக்கிறது. மற்றபடி ஐரோப்பா, சிங்கப்பூர் அழைப்பதும் இலவசம். இந்த மாதிரி தளங்களில் இந்தியா எப்போதுமே மிஸ்ஸிங். ஃப்ரீன்னா மக்க பிரிச்சி மேஞ்சிடாது?

    பாட்டொன்று கேட்டேன் வரிசையில் ஒரு சிலவற்றை கேட்டிருக்கிறேன். கேட்கவேண்டும் என்று வைத்திருக்கும் வரிசையில் இவையும், பாஸ்டன் பாலாஜியின் அம்மாவின் சீவகசிந்தாமணியும் ரொம்ப நாட்களாக இருக்கின்றன. :-(

    கூகுளாண்டவரின் லீலைகளே லீலைகள். அந்தந்த மொழியில் வெட்டி ஒட்டினால் ஆங்கிலத்தில் translitere பண்ணினால் நன்றாக இருக்கும். நம் கன்னட சங்க தலைவர் சில பத்திரிக்கைகளில் எழுதித் தள்ளுகிறார். அதை படிக்க முடிந்தால் சன்னாக உண்ட்டூ. அதேமாதிரி தெலுங்கும் படிக்க முடிந்தால் அந்தரிகி மா வந்தனமு. கூகுளாண்டவர் துணையுடன் ப்ரான்ஸிலிருக்கும் பாண்டிச்சேரிக்காரர்களை சாட்டில் அசத்தியிருக்கிறேன். அவர் இப்போதும் எனக்கு ப்ரென்ச் தெரியாது என்று நம்ப மறுக்கிறார்.(மாப்ள என்ன அழகா ப்ரென்ச் எழுதறார்னு எரிகிற தீயில் சர்டிபிகேட் வேற...)

    ReplyDelete
  3. ஜெயகாந்தன்,
    அருமையான பதிவு. நீங்கள் பயன்படுத்தியுள்ளள நிறைய தமிழ் வார்த்தைகளுக்கு எனக்கு அர்த்தம் புரியவில்லை என்பது நிஜம். தரவிறக்கம் - Downloadஆ, சரி பாவிக்க என்றால்?

    அன்புடன்,

    முரளி.

    ReplyDelete
  4. நன்றி முரளி. //பாவிக்க = உபயோகித்தல்//

    நாகு: //ஆனால் இந்த மாதிரி நில ஆக்கிரமிப்பு எல்லாம் ஜாஸ்தியா படல//
    உங்க ட்ரேட் மார்க்'ஐ பயன்படுத்தியதிற்கு என்னை பின்னூட்டத்தில திட்டக்கூடாதுன்னு தான் அப்படி சொன்னேன். நில ஆக்ரமிப்பு செய்ய இடம் தந்த நாகுவிற்கு நன்றி..

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!