Thursday, April 24, 2008

பித்தனின் கிறுக்கல்கள்

ரிச்மண்ட் நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி!!!!!


எனது சமீபத்திய தமிழ் சங்கத்து விழாவைப் பற்றிய விமர்சனம் பலருக்கு மனவருத்தத்தை தந்திருப்பதாக சில நண்பர்கள் மூலம் தெரிய வந்தது. எனது விமர்சனங்கள் மற்றவர்களைப் புண்படுத்துவதற்காக எழுதப் படவில்லை. நிகழ்ச்சியைப் பார்க்கத் தவறியவர்களும் அடுத்த முறை பார்க்கத் தூண்ட வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பிக்கப் பட்டது. எப்பொழுது ஒரு செயல் மற்றவர்களைத் துன்புறுத்தியதோ அதை உடனடியாக நிறுத்துவதுதான் பண்பு. எனவே இனி வரும் எந்த தமிழ்சங்கத்தின் விழாவைப் பற்றியும் நான் விமர்சனம் எழுதி அதன் மூலம் எவரையும் வேதனைப் படுத்தப் போவதில்லை.

இந்த முடிவு நேற்று காலையிலேயே எடுத்து விட்டேன், சில நிமிடங்களுக்கு முன்பு எனது ஒரு நண்பன் சொன்ன ஒரு தகவலினால் இந்த முடிவை செயல் படுத்துவது சரி என்ற தீர்மானத்தை எடுத்து விட்டேன்.

அவன் என்னைத் தொடர்பு கொண்டு,

"பித்தா, என் மகளை கணிதம் கற்றுத் தரும் ஒரு இடத்தில் விட்டு விட்டு வெளியில் அவளுக்காக காத்திருக்கும் போது நமது சங்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி என்னிடம் நீங்கதான் பித்தனா என்று கேட்டார், நான் இல்லை, நாகுவிடம் கேளுங்களேன் என்று சொல்லி விட்டேன் என்றான்.

அவன் பிறகு, "இந்தாப்பா எல்லோரும் நாந்தான் பித்தன்னு நெனைச்சு கிட்டு என்னை அடிக்க வர்ராங்க, அதனால், ஒன்று நீ யார் என்று சொல்லி விடு இல்லை நம் தமிழ் சங்கத்தைப் பற்றி இனி எழுதி என்னை அடி வாங்க வைக்காதே" என்றான்.

அவன் என்னிடம் இப்படி பேசியது இல்லை எனவே அவன் இப்படி பேசியதும் என்னுடைய இந்த முடிவிற்கு ஒரு காரணம்.


இதுவரை வெளி வந்த எந்த விமர்சனமாவது யாரையாவது எந்த அளவிலாவது வேதனைப் படுத்தியிருந்தால் அதற்காக எனது ஆழ்ந்த மன வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


எனக்கு தமிழ் சங்கத்தின் இணைய தளத்தில் (அல்லது வலைப்பூ) சுதந்திரமாக எழுத அனுமதித்த அனைவருக்கும், முக்கியமாக என்னை எழுத அதிகம் ஊக்குவித்து எனது எழுத்துப் பிழைகளைத் திருத்தி, நான் என்ன எழுதினாலும் தவறாமல் பின்னூட்டமிட்டு எனக்கு ஆதரவளித்த நாகு அவர்களுக்கும் இந்த சமயத்தில் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன்.

இதனால் நான் கிறுக்கப்போவதை நிறுத்தப் போவதில்லை, எனக்கென்று பல இருக்கின்றன, இந்திய அரசியல், தமிழக அரசியல், அமெரிக்க அரசியல், படித்த/படிக்கும் புத்தகங்கள், பார்த்த படங்கள், பார்த்த நாடகங்கள், பல கதாசிரியர்களின் தனித்துவம் போன்றவற்றை எழுதிக்கொண்டே இருக்கலாம்.
நாடகங்களின் விமர்சனத்தில், மே 11 நமது கோவிலில் அரங்கேற இருக்கும் ரம்பம்பம் ஆரம்பம் நாடகம் பற்றி நான் எதுவும் எழுதப் போவதில்லை, எனவே கவலை வேண்டாம்.

பித்தன்.
piththanp@gmail.com

6 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. நன்றி கவிநயா.

    முதலில் உங்க இரண்டு கதைகள்:
    இப்போதான் கதைகளை படித்தேன். நல்ல நடை, நல்ல கருத்து, நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

    எனது நண்பன் சொன்னதால் மட்டும் இந்த முடிவெடுக்கப் படவில்லை. சமீபத்திய என் விமர்சனம் பலரின் மனதைப் புண்படுத்தியிருப்பதாக பரவலான தகவல் பதிவு வெளியான மறுநாள் காலை முதலே வெளிவர ஆரம்பித்து விட்டது. சரி நம்மால் யாருக்கும் எந்த மனவருத்தமும் இருக்க வேண்டாம் என்று ஒதுங்கி விட்டேன்.

    பித்தன்.

    ReplyDelete
  3. முதலில் நீங்கள் எழுதிய விமர்சனத்தை எடுத்தது தவறு. அடுத்து நீங்கள் எடுத்த முடிவு தவறு நண்பா.. ஒருவர் மேடையேரி இது தான் என்னுடைய ப்ரொகிராம் என்று பண்ணிவிட்டல், எநத வித விமர்சனத்துக்கு அவர் பக்குவபடவேண்டும். இல்லை என்றால் மேடையே ஏறகூடாது.

    விமர்சனமே இல்லாமல் ஒரு நிகழ்ச்சி தேவையா என்று தமிழ் சங்கமே முடிவு பண்ணவேண்டும். என்னை பொறுத்தவர விமர்சனம் இருந்தால் தான் மேலும் மேலும் நாம் வளர உதவும்.

    விமர்சனம் என்பது அவர் அவர் கண்ணோட்டம். இதை புரிந்து கொண்டு தமிழ் சங்கம் செயல் பட்டால் சங்கத்திற்க்கு நல்லது. சும்மா நமக்கு நாமே முதுகில் தட்டி கொண்டு நன்றாக பண்ணினேன் என்று கூறுவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை...

    ReplyDelete
  4. First let me apologize for writing in English.

    I do not agree with Darumi's view. These are not professionals coming on stage. These are people who are mustering courage to even get on stage.

    Criticism from Pithan in the past did not receive this much protest. So its not that people are not receiving criticism well.

    If we follow his suggestions about traditional kummi for the ladies,etc., why don't we close down Tamil Sangam and start a bajanai madam? That will make the A center arivujeevis happy.

    ReplyDelete
  5. ஐயா தருமி/அனானி அவர்களே,

    இதனால் விளைந்தது போதும். மேலும் ஆரம்பிக்க வேண்டாம். இது எனது தாழ்மையான வேண்டுகோள்!

    நாகு

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!