Thursday, March 13, 2008

அட நம்ம ஊரு..

இந்த வாரம் அலுவலகத்துக்கு சென்றபோது, என் மேஜையில் ஒரு வாரப்பத்திரிக்கை. முகப்பைப் பார்த்து ஏதோ நம்ப ஊர் பத்திரிக்கை என்று நினைத்துவிட்டேன். பார்த்தால் இங்கே வரும் ஒரு பத்திரிக்கை. ஓசியில் வந்து கொண்டிருக்கும் பத்திரிக்கை.



இந்தியக் கம்பெனிகள் விலைமலிவான வேலைக்கு மட்டுமில்லாமல் மற்ற கில்லாடி வேலைகளும் பண்ண துடிக்கிறார்களாம். ஆனால் அவர்களால் இன்னும் கில்லாடி வேலை பண்ண முடியாது என்று ஜல்லியடிக்கிறார்கள். படத்திலுள்ள அம்மணி பற்றி ஒன்றும் சொல்லக் காணோம் :-)

இந்த பத்திரிக்கை இரண்டு மாதமாக ஓசி சந்தாவை புதுப்பிக்காவிட்டால் மேலும் அனுப்பமாட்டோம் என்று பயமுறுத்தினார்கள். நிறுத்தினால் நல்லது என்று நிம்மதியாக இருந்தேன். பயமுறுத்துவதை நிறுத்திவிட்டார்கள்! நமக்கு இருக்கும் நாழிக்கு இரண்டு பக்கம் படிக்குமுன் மூன்று இதழ்கள் வந்து நிற்கின்றன.

4 comments:

  1. அட! ஆனா ஃபோட்டோ நம்மூருதானே? இங்கதான் சேலைக்கு வேலை குடுத்து யாரும் வேலைக்கு சேலை கட்டறதில்லையே :( நம்மூர்லயே கூட இப்பல்லாம் அப்படித்தான்னு கேள்வி..

    //இந்த பத்திரிக்கை இரண்டு மாதமாக ஓசி சந்தாவை புதுப்பிக்காவிட்டால் மேலும் அனுப்பமாட்டோம் என்று பயமுறுத்தினார்கள். நிறுத்தினால் நல்லது என்று நிம்மதியாக இருந்தேன். பயமுறுத்துவதை நிறுத்திவிட்டார்கள்!//

    :)

    ReplyDelete
  2. These mag companies have been sending me a copy every week even after they said it will be stopped next week if I dont pay! Wonder how much they get on ads to send us these free!

    Hm, They have to use a lady on Cover page to attract us to glance atleast once!

    ("ஜல்லியடிக்கிறார்கள்" - reminds Sujatha)

    ReplyDelete
  3. அய்யா ஜெயகாந்தரே - நான் பத்திரிக்கைல உங்க படம் போட்டிருந்தாலும் படிப்பேன் :-)

    'ஜல்லியடிக்கறதுக்கு' பேடன்ட்டே சுஜாதாவிடம்தான்.

    ReplyDelete
  4. கவிநயா - வேலைக்கு சேலைன்னதும் ஞாபகம் வருது. இந்திரா நூயி அலுவலக்த்துக்கு சேலையில் கூட செல்வார் என்று படித்த ஞாபகம்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!