Tuesday, April 17, 2007

வெறி

நன்னண்பர் கூட்டம்வேண்டும்
நாலுபேரைத் தெரியவேண்டும்

நயம்பட விவாதிக்க
நல்லவார்த்தை பேசவேண்டும்

ஏதுமின்றித் திரிந்ததாலே
ஏந்தினாயோ துப்பாக்கி

பட்டுப் பட்டென்று
சுட்டு வீழ்த்தினாய்

ஆம்புலன்ஸ் சத்தத்தையும்
அலறல்கள் மீறியதே

பயிலும் உலகையே
பீதியில் ஆழ்த்தினாய்

உள்ளிருக்கும் எல்லோரையும்
மரணபயம் தொற்றியதே

மடிந்தாய் ஒருவழியாய்
மறுபடியும் வராதே

வந்தாலும்,

நன்னண்பர் கூட்டம்வளர்
நாலுபேரைத் தெரிந்துகொள்

நயம்பட விவாதிக்க
நல்லவார்த்தை கற்றுக்கொள்

ஏதுமின்றித் திரியாததால்
ஏந்தவேண்டாம் துப்பாக்கி ...

2 comments:

  1. நல்ல கருத்து. தனிமையை விட கொடுமையானது ஏதுமில்லை. இதற்கு முன் நடந்த பல துப்பாக்கி சூடுகளுக்கு மன அழுத்தம், தனிமை, இனவெறி, போதை போன்ற வெகு சில காரணங்களே அறியப்பட்டது. என்று தணியும் இந்த துப்பாக்கி மோகம்?

    ReplyDelete
  2. கொடுமையான சம்பவம். சதங்கா நன்றாக சாடியிருக்கிறார். லோகநாதன் என்ற இந்தியரும் மடிந்திருக்கிறார்.

    இதன் தொடர்பாக ஒரு பிரார்த்தனைக் கூட்டம் நிகழவிருக்கிறது. விவரங்கள்:
    We are deeply saddened by the tragic events of today at Virginia Tech where 33 young students lost their lives and many more have been severely injured.

    In their memory Cultural Center of India is organizing a gathering on Wednesday, April 18, 2007 @ 7:00 pm at CCI Hall, 6641 Ironbridge Parkway, Chester, VA 23831 to pray, condole, and console each other.

    May I ask all of you to please show our support to our Indian as well as American communities by gathering there.

    On behalf of CCI and India Association I thank you for your support and apologize for such a short notice.

    Thank you.

    Rakesh Gupta - President
    India Association of Virginia

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!